Gavitha / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளரான பான் கீ முன், பதவிக்காலம் நிறைவடைந்து செல்லவுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அலைபேசியில் தொடர்புகொண்டுள்ளதுடன், இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கை, சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பாராட்டிய அவர், நல்லிணக்க செயற்பாடுகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில், இலங்கையைப் புதிய பாதையில் பயணிக்கச் செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட அர்ப்பணிப்பை பாராட்டிய அவர், ஜனாதிபதியின் தலைமையில் இலங்கை, எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெறும் எனவும் குறிப்பிட்டார்.
பதவியிலிருந்து விலகிச்சென்றாலும் இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் பான் கீ மூன் இதன்போது உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக பான் கீ மூன், தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பை பாராட்டிய ஜனாதிபதி, அவருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago