2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

பிரதமரின் கண்காணிப்பின் கீழ் அமைச்சுகள்?

Niroshini   / 2016 மார்ச் 26 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

செயற்பாட்டுத் திறனற்ற அமைச்சுகளின் நடவடிக்கைகளை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒரு செயற்பாட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பல்வேறு அமைச்சுளின் செயற்பாட்டுத் திறனற்ற முன்னெடுப்புகள் காரணமாக குறித்த இலக்கை இதுவரை எட்டமுடியாத நிலையில் இயங்குகின்றன.

தற்போது,  வெளிநாட்டமைச்சின் செயற்பாடுகள் முற்றுமுழுதாக பிரதமரின் கண்காணிப்பின் கீழ் நடைபெறும் அதே வேளை, வெளிநாட்டமைச்சின் அதிகாரிகள் மட்டத்திலும் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே போன்று கல்வி அமைச்சின் சில நடவடிக்கைளிலும் அண்மைக்காலங்களில் பிரதமர் அலுவலகம் தலையீடு செய்திருந்தது. இதற்கு மேலதிகமாக கல்வி அமைச்சின் தேசிய மட்ட நடவடிக்கைகளை முற்றாக பிரதமர் அலுவலகத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X