Princiya Dixci / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை சீருடைக்கான உத்தியோபூர்வ வவுச்சர்களை, வங்கியில் மாற்றிக்கொள்வதற்கு சென்றபோது, அந்த வவுச்சர்களில் நான்கு வவுச்சர்கள் போலியானவை என்றும், அவற்றை மாற்றமுடியாது என்றும் வங்கி முகாமையாளர் தெரிவித்தமையால், புடவைக்கடை உரிமையாளர்கள் திக்குமுக்காடிப் போயுள்ளனர்.
அவ்வாறான சம்பவமொன்று, காலி பத்தேகம பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
அந்த வவுச்சர்களின் இரகசியக் குறியீட்டு இலக்கம் பிழையானது. பாடசாலையின் பெயர் என்று குறிப்பிடவேண்டிய இடத்தில், பாடசாலையின் இறப்பர் முத்திரையே இடவேண்டும். எனினும், இரத்துச் செய்யப்பட்ட வவுச்சர்களில், பாடசாலையின் பெயர், பேனையினாலே எழுதப்பட்டுள்ளது. ஆகையினால், அந்த வவுச்சரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று, அந்த வங்கியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதனால், தாங்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள, பாதிக்கப்பட்ட புடவைக்கடை உரிமையாளர்கள், பேனையினால் எழுதப்பட்ட வவுச்சர்களை இனிமேல் பொறுப்பேற்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
9 minute ago
14 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
15 minute ago