Editorial / 2026 பெப்ரவரி 05 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகர் சிவகார்த்திகேயன், தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இந்த பயணத்தின் போது, தனது இரண்டு மகன்களுக்கும் முடி காணிக்கை செலுத்தி, குடும்பத்தோடு கோவில் வளாகத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவரது மனைவி ஆர்த்தி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பொதுவாகவே, திருச்செந்தூர் முருகன் கோவில் தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய முக்கிய தலங்களில் ஒன்று. அங்கு குடும்பத்துடன் நேரம் செலவிட்டு, குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்து, முடி காணிக்கை செலுத்திய சிவகார்த்திகேயனின் இந்த செயல், ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பட உலகின் பிஸியான சூழலுக்கு நடுவிலும், குடும்பத்திற்கான நேரத்தை ஒதுக்கும் அவரது மனப்பாங்கு பலரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.
28 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
47 minute ago
2 hours ago