Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Gavitha / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது பிள்ளைகளுக்கு பாடசாலைக் கொப்பிகளை வாங்கொடுக்க முடியவில்லை என்று கூறி, நில்வலா ஆற்றின் நடுவில் நடந்துச் சென்ற பெண்ணை, பொலிஸார் காப்பாற்றியுள்ளர்.
மாத்தறை, கன்தர, நாவோதுன்ன பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணே, இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு புதிய வகுப்புச் செல்லவுள்ள தன்னுடைய 6 பிள்ளைகளுக்கும் கொப்பிகளை வாங்கிக்கொடுப்பதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தே, இவர் ஆற்றுக்கு நடுப்பகுதியில் நடந்துச் சென்றுள்ளார்.
இவருக்கு 6,9,11,13,15 மற்றும் 17 வயதுகளை உடைய பிள்ளைகள் இருப்பதாக தெரியவருகின்றது. அவர், ஆற்றின் நடுப்பகுதிக்கு நடந்துச் செல்லும் போது, 'போக வேண்டாம் அம்மா' என்று கத்திக்கொண்டு, 6 பிள்ளைகளும் ஆற்றின் கரையில் இருந்து அழுதுக்கொண்டிருந்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, மாத்தறை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பாளரும் கான்ஸ்டபிள் ஒருவரும், ஆற்றுக்குள் இறங்கிச் சென்று, அந்தப் பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.
இவருடைய கணவர் 6 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்து விட்டதாக தெரியவருகின்றது.
தற்போது பிள்ளைகளை பொறுப்பேற்றுள்ள பொலிஸ் நிலையம், அந்தப் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
01 Jul 2025