Editorial / 2017 மே 25 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
வைத்தியர் ஒருவரின் தந்தை, தனது மகனுக்குப் பதிலாக, நோயாளியொருவருக்கு சிகிச்சை அளித்ததால், அந்த நோயாளி உயிரிழந்த சம்பவமொன்று, தெஹிவளையில் இடம்பெற்றுள்ளது.
மாபிம - ஹெய்யன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த துஷார லக்மால்
( வயது 24) என்ற இளைஞனே, சம்பவத்தில் உயிரிழந்த நோயாளியாவார்.
வயிற்று வலி காரணமாக, தெஹிவளை - அத்திடிய வீதியில் இயங்கும் தனியார் வைத்தியசாலையொன்றுக்குச் சென்ற மேற்படி இளைஞனுக்கு, அந்நேரத்தில் வைத்தியர் இல்லாத காரணத்தினால், வைத்தியரின் தந்தையே, அவருக்கு சிகிச்சையளித்துள்ளார்.
இந்நிலையில், இளைஞனுக்கு வழங்கிய சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவ்விளைஞன் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில், தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
2 hours ago
8 hours ago
01 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
01 Jan 2026