2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

முகாம் மக்களுக்கான செயற்திட்டங்களை துரிதப்படுத்துமாறு அரசாங்கம் உத்தரவு

Super User   / 2010 மே 24 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களுக்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற உயர் மாநாட்டின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

அத்துடன் இன்னமும் மேற்கொள்ளப்படாத நிலையிலுள்ள வேலைத்திட்டங்களை துரிதகதியில் செய்து முடிக்குமாறு இக்கூட்டத்தில் கலந்து கொண்ட உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வன்னி மாவட்டத்தில் உள்ள காடுகளை அழித்து மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிசமைத்தல், அகதி முகாம்களில் வாழும் மக்களுக்கு மிக விரைவில் நிரந்த வீடுகள் அமைத்துக் கொடுத்தல் மற்றும் வரவு செலவுத்திட்டம் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியில் இன்னமும் செலவிடப்படாத நிலையில் உள்ள தொகையினை இந்த நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துதல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். 

இந்த உயர் மட்ட சந்திப்பில் மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான் ஹுனைஸ் பாரூக் நூர்தீன் மசூர், வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் வன்னி மாவட்டத்தில் பணியாற்றும் தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.(R.A)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--