2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் சுனாமி அனர்த்தத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள்

Super User   / 2010 ஜூன் 25 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுனாமி அனர்த்தத்தின்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளை இழந்த அனைவருக்கும் புதிதாக வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பிரிவுகளில் 23,962 வீடுகளை அரசாங்கமும் உள்நாட்டு, வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்களும் இணைந்து நிர்மாணித்துக் கொடுத்திருப்பதாக மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமையாளர் எஸ்.ஜெகநாதன் தெரிவித்தார்.

இந்நிலையில், வாகரையில் 3,254 வீடுகளும், மட்டக்களப்பு நகரில் 6010 வீடுகளும், களுவாஞ்சிக்குடியில் 6,176 வீடுகளும், ஆரையம்பதியில் 3,147 வீடுகளும், காத்தான்குடியில் 3,171 வீடுகளும், வாழைச்சேனையில் 1,648 வீடுகளும், செங்கலடியில் 498 வீடுகளும், கிரான் செயலகப் பிரிவில் 58 வீடுகளும் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.அருமைநாயகம் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .