2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

’மட்டக்களப்பு தனிமைப்படுத்தபடலாம்’

Editorial   / 2020 மார்ச் 14 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அமைந்துள்ள சூழல் ஓர் தீவுப் பகுதியாகவே காணப்படுகின்றதென தெரிவிக்கும் மட்டு. மாநகர சபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் , கொரோனா தொற்று பரவினால் அந்த தீவு தனிமைப்படுத்த படலாமென்றும் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாநகர சபையின் 31ஆவது சபை அமர்வானது (13) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

இவ்வமர்வில் கலந்து கொண்டு மேலும் உரையாற்றிய அவர், 

கொரொனா நோய்த்தொற்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளை தடுத்து வைத்து அவதானிக்கும் வகையில் மட்டு. தனியார் பல்கலைக்கழகம்   மாற்றப்பட்டுள்ளதெனவும்,   அங்குள்ளவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானால் அவர்கள் மட்டக்களப்பு வைத்தியாசாலைக்கே சிகிச்சைக்கு அழைத்த வரப்படுவர் என்றார்.

நாட்டில் பல இராணு முகாம்கள் தனித்து காணப்படும் போதே மட்டக்களப்பு தெரிவு செய்யப்பட்டுள்ளதெனவம்,  அரசாங்கம் மட்டக்களப்பை பழிதீர்க்கும் இடமாக பயன்படுத்திகொள்வதானவும் சாடினார்.

நாட்டில் 12 போத​னா வைத்தியசாலைகள் உள்ளபோதும் மட்டு வைத்தியசாலையை மாத்திரம் தெரிவு செய்துள்ளமைய சந்தேகத்தை தோற்றுவிப்பதாக தெரிவித்த அவர்,    குறித்த வைத்தியசாலையில் அதற்குரிய சிகிச்சை அளிப்பதற்கான இயந்திர வசதிகளும் இல்லை என்றார்.

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .