2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட யு.என்.எச்.சி.ஆர் அலுவலகம் மூடப்படவில்லை

Super User   / 2010 ஜூலை 01 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலய (யு.என்.எச்.சி.ஆர்) அலுவலகத்தில் ஆட்குறைப்பு செய்யப்பட்டு குறித்த அலுவலகம் பிறிதொரு இடத்திற்கு மாற்றப்படுவதாக அதன் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த அலுவலகம் மூடப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று தெரிவித்த அந்த அதிகாரி, குறித்த அலுவலகம் தொடர்ந்து இயங்கவுள்ளதாகவும்   கூறினார்.

கடந்த 8 வருடங்களாக யுத்தம் மற்றும் சுனாமி  அனர்த்தங்களின்போது அகதிகளாகியுள்ள மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களின் நலன்களை மேற்படி அலுவலகம் கவனித்து வருகிறது.

முன்னர் 15 பேருடன் இயங்கிய அலுவலகம் தற்போது 3 பேருடன் இயங்குவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னமும் 93 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியுள்ளதென்பதுடன், இந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டதும் எதிர்வரும் டிசம்பர் மாதம் மேற்படி அலுவலகம் மூடப்படலாமெனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--