2021 மே 08, சனிக்கிழமை

மண்சரிவு அபாயத்தின் காரணமாக 20 பேர் இடம்பெயர்வு

Editorial   / 2017 ஜூன் 03 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன் 

அம்பகமுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஹட்டன், டிக்கோயா பெரிய மாணிக்கவத்தை தோட்டம் 2ஆம் பிரிவில் மண்சரிவு அபாயத்தின் காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர், இன்று (03) காலை இடம்பெயர்ந்து குறித்த தோட்டத்தில் உள்ள பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

பெய்து வரும் கடும் மழையினால் இன்று விடியற்காலை 5 மணியளவில் குறித்த வீடுகளில் இரண்டு வீடுகளின் பின்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், பாரிய வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளது. மேலும், இரண்டு வீடுகளுக்கு மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதனால் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனால் இக்குடியிருப்புப் பகுதியில் வசித்த இவர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு  இடம்பெயருமாறு, இயற்கை அனர்த்த முகாமைத்துவம் மற்றும் அம்பகமுவ பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தோட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டதையடுத்து, இவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு பொருட்களைத் தோட்ட நிர்வாகம் மற்றும் பொது மக்கள், முக்கிய அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X