2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மாணவர்களுக்கான உடல் ரீதியான தண்டனைகளுக்கு தடை

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படுவதை தடைசெய்யும் வகையிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், எதிர்பார்ப்பதை விடவும்  உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படுவது அதிகரித்துள்ளதால், இது தொடர்பான கலந்துரையாடலை முன்னெடுப்பது அவசியமென, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஸன குணவர்தன தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டில் இலங்கையிலுள்ள பாடசாலைகளில் முன்னெடுக்கபடும் உடல ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை நிறைவு செய்வதற்கான தேசிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி செயலகம், சிறுவர் துன்புறுத்தலுக்கு எதிரான அமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா மன்றம் என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படக் கூடாதென்ற சுற்றுநிருபமானது முதற் தடவையாக 1913ஆம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஸன குணவர்தன தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .