2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

மண் ஆற்றில் கலப்பதால் சுற்றாடலுக்கு அச்சுறுத்தல்

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெம்பியன்- எல்டொப் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தனியார் நீர் மின் உற்பத்தி நிலைய கட்டுமாணப் பணிகளின் போது, வெட்டி அப்புறப்படுத்தப்படும் மண் கெசல்கமுவ ஓயா ஆற்றில் கலக்கவிடப்படுவதாகவும், இதனால் சுற்றாடலுக்கு பாரிய ​அச்சுறுத்தல் ஏற்படுவதாக எல்டொப் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசல்றீ நீர்த்தேக்கத்துக்கு நீரைக் கொண்டு செல்லும் பிரதான ஆறாகவும் இந்த கெசல்கமுவ ஓயா ஆறு விளங்குகின்றது.

பெ​​கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி அகழப்படும் மண் அதிகாலை நேரத்தில் மிகவும் சூட்சுமமான ரீதியில் ஆற்றில் கொட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து பொகவந்தலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.சி. தர்மபிரியவிடம் வினவிபோது,இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--