2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

மாத்தளையில் மின்னல் தாக்கி ஐவர் காயம்

Super User   / 2010 மார்ச் 30 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளையில் நேற்று மாலை மின்னல் தாக்கியதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் நான்கு பெண்களும், ஆண் ஒருவரும் அடங்குகின்றனர்.

தேயிலைக் கொழுந்து பறிப்பில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே, இவர்கள் மின்னல் தாக்கி காயமடைந்துள்ளனர்.

ஆணின் காற்சட்டைப் பையில் கையடக்கத் தொலைபேசி இருந்திருக்கிறது எனவும், இதன் காரணமாகவே இந்த ஐந்து பேரும் மின்னல்த் தாக்கதிற்கு உள்ளாகியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .