Editorial / 2017 ஜூலை 13 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்துசிவலிங்கம் தொடர்பில், வெளியான செய்தி பொய்யானது” என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில், காங்கிரஸ் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நுவெரிலியா மாவட்ட எம்.பி முத்துசிவலிங்கம் தொடர்பில், மலையகத்தைப் பிரதானப்படுத்தி இயங்கிவரும் இணையத்தளமொன்று, 11.07.2017 ஆம் திகதி பதிவேற்றியுள்ள செய்தி, முற்றுமுழுதாக உண்மைக்குப் புறம்பானது.
உடல்நலக் குறைவு காரணமாக, முத்துசிவலிங்கம் எம்.பி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப்பதவியிலிருந்து விலகவுள்ளதாக, 11.07.2017 ஆம் திகதியன்று செய்தி வெளியாகியுள்ளது. அந்தச் செய்தி, முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago