2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

முதன்முறையாக கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை;உள்ளூர் வைத்தியர்கள் சாதனை

Super User   / 2010 ஜூலை 01 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் முதன் முறையாக கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சையைச் செய்து உள்ளூர் வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் மந்திக விஜேரத்ன உள்ளிட்ட குழுவினரே இந்த சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.

கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்காக இதுவரை காலமும் சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு பயணிக்க வேண்டிய நிலை இலங்கையர்களுக்கு ஏற்பட்டிருந்தது.

இதற்காக சுமார் 50 இலட்சம் ரூபா வரையில் செலவிட நேர்ந்தது. இந்நிலையில் குறித்த சத்திர சிகிச்சையினை இலங்கையிலேயே மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பினை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர்.

இன்று வெற்றியளித்த இந்த சத்திர சிகிச்சையானது 40 வயதுடைய ஒரு நோயாளிக்கே மேற்கொள்ளப்பட்டது. மூளை செயலிழந்து மீண்டும் வாழவைக்க முடியாத நிலையிலுள்ள நோயாளி ஒருவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கல்லீரல் ஒன்றே மேற்படி நபருக்குப் பொறுத்தப்பட்டுள்ளது.

தீடீர் விபத்தொன்றில் சிக்கி மூளை செயலிழந்த குறித்த நோயாளியின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றன அகற்றப்பட்டன. இந்நிலையிலேயே குறித்த கல்லீரல் மேற்படி 40 வயதுடைய நோயாளிக்கு மாற்று சத்திர சிகிச்சை மூலம் பொற்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .