Suganthini Ratnam / 2017 ஜூன் 01 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம், பொன் ஆனந்தம்
எட்டு வயதுடைய மூன்று சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, மூதூர் மற்றும் ஈச்சிலம்பற்றுக் கோட்டங்களில் 32 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்காது பகிஷ்கரிப்பில் ஈடுபடும் நடவடிக்கை இன்றும் தொடர்ந்தது.
மூதூர் கோட்டத்தில் 14 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் சமூகமளிக்கவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, ஈச்சிலம்பற்றுக் கோட்டத்தில் 18 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கவில்லை என அக்கோட்டக் கல்விப் பணிப்பாளர் க.அருள்நேசராசா தெரிவித்தார்.
மேற்படி பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்களும் ஆசிரியர்களும் மாத்திரமே பாடசாலைகளுக்கு சமூகமளித்துள்ளனர்.
பெரியவெளிக் கிராமத்திலுள்ள பாடசாலையொன்றில் கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டுவரும் தொழிலாளிகள் சிலர், பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற இந்தச் சிறுமிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்;டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .