Editorial / 2017 மே 24 , பி.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்காக, அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சில், செயலகமொன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.
இலங்கைக்கான முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்காக, பல்வேறு மறுசீரமைப்புகளை செயற்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக பல்வேறு தொடர்புபட்ட அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையில் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது.
அவற்றுக்காக, விரிவான செயற்றிட்டங்களுடன் குறித்த பணிகளுக்காக பொறுப்புக்கள் மற்றும் தலைமைத்துவம் கிடைக்கும் வகையில் முறையான செயற்றிட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு ஏதுவான வகையிலும் பொருத்தமான செயன்முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான தேவை எழுந்துள்ளது.
அதனடிப்படையில், இது தொடர்பில் அர்ப்பணிக்கின்ற குழுவொன்றுடன் செயலகமொன்றை அபிவிருத்தி உபாயமுறைகள் சர்வதேச வர்த்தக அமைச்சில் உருவாக்குவதற்கும், குறித்த நிர்வனங்களுக்கு இடையில் தொடர்பினை ஏற்படுத்துவதற்காக 10 தொழில்நுட்ப செயலணிகளை அமைப்பதற்கும், அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
7 hours ago