2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

முதலாம் கட்ட பேச்சுவார்த்தை; இ.தொ.கா வெளிநடப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் முதலாங்கட்டப் பேச்சுவார்த்தையிலிருந்து, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளிநடப்புச் செய்துள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையிலான முதலாம் காட்ட பேச்சுவார்த்தை, முதலாளிமார் சம்மேளனத்தின் ராஜகிரிய அலுவலகத்தில்  இன்று (18)  காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அதன் தலைவரும் பொதுச் செயலாளரும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் யூனியன் சார்பில் அதன் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தலைமையிலான குழுவினரும்  பங்கேற்றுள்ளனர்.

மேலும், பெரும் தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பாக, அதன் தலைவர் எஸ்.இராமநாதன் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றுள்ளனர்.

முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பில், 22 பெருந்தோட்டக் கம்பனிகளின் நிர்வாகிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, தொழிலாளர் தரப்பு நியாயங்களையும் பெருந்தோட்ட நிறுவனங்களால், தோட்டத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளையும் மூன்றுத் தொழிற்சங்கங்களும் பெருந்தேட்ட நிறுவனங்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளன.

இம்முறை, தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான அடிப்படைச் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, இ.தொ.கா முன்வைத்துள்ளது.

எனினும் முதலாளிமார் சம்மேளனம் அதற்கான எந்த முன்மொழிவுகளையும் வழங்கவில்லை என்றும் இதன் காரணமாகவே, இ.தொ.கா  கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தததாகவும் இ.தொ.காவின் உபதலைவர் எஸ்.அருள்சாமி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .