2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

யாழ்.மாநகரசபை மாதாந்த கூட்டம் இன்று நடைபெறவில்லை - மேயர் யோகேஸ்வரி

Super User   / 2010 மே 12 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நடைபெறவிருந்த யாழ். மாநகரசபையின் 8ஆவது மாதாந்த கூட்டம்  இடம்பெறவில்லை என யாழ்.மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசா சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

யாழ். மாநகரசபையின் பிரதி மேஜர் இளங்கோ (ரீகன்) கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதன்  காரணமாகவே மேற்படி கூட்டம் நடைபெறவில்லை எனவும் அவர் கூறினார்.

இவரது கைது தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும் எனவும் யோகேஸ்வரி பற்குணராசா குறிப்பிட்டார்.

சாவகச்சேரி நீதிவானுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் யாழ் மாநகரசபையின் பிரதி மேயர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை,  இவர் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து  யாழ். மாநகரசபையின் ஊழியர்கள் நேற்று மேற்கொண்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டையடுத்து கைவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.(R.A)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--