2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் பிரதி அமைச்சர் பாயிஸின் சாரதி ஆனமடுவை பகுதியில் கைது

Super User   / 2010 மே 11 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸின் சாரதி ஆனமடுவை பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குருநாகலிருந்து ஆனமடுவை நோக்கி மேற்படி சாரதி பயணித்துக்கொண்டிருந்த  வாகனத்தை இடைமறித்து சோதனையிட்ட பொலிஸார், அதற்குள்லிருந்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் பயன்படுத்தப்படும் எம்-.16 ரக துப்பாக்கி, 30 ரவைக்கள் உள்ளடக்கப்பட்ட இரு மகசீன்கள் போன்றவற்றை மீட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த மற்றுமொருவரையும் கைதுசெய்த ஆனமடுவை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--