2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

மூன்றாவது நாளாகவும் சென்னையில் வெசாக்; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

Super User   / 2010 மே 30 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மகாபோதி சங்கம் சென்னையிலுள்ள இலங்கை பிரதித் தூதுவராலயத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வெசாக் தின கொண்டாட்டங்கள் இன்று சென்னையில் இடம்பெற்று வருகின்றன.

இவ் வெசாக் தினக் கொண்டாட்டங்களில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்துகொண்ட வண்ணமுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் நாளையும்  முக்கிய வெசாக் தினக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மகாபோதி நிலையத்தில் விசேட கண்பரிசோதனை முகாமொன்று நடைபெறும் என சென்னை மகாபோதி நிலைய மகாநாயக்கரான கலவான மகாநாம தேரர் தெரிவித்தார். 

மேலும், மாலை 6 மணிக்கு விசேட வெசாக் பெரேரா இடம்பெறவிருப்பதுடன், இதில் இலங்கை மற்றும் இந்திய நடனக் கலைஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதனையடுத்து, இரவு 8 மணி முதல் விசேட சொற்பொழிவு இடம்பெறவிருப்பதாகவும் அவர் கூறினார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--