2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

மூன்று படிமுறைகளில் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் - அமைச்சர் விமல் வீரவன்ஸ

Super User   / 2010 மே 13 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பு சீர்த்திருத்தமானது மூன்று படிமுறைகளின் கீழ் முன்னெடுக்கப்படும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நிர்மாணம் பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொதுச்சேவைகள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சித் தலைவர்களுடனான நீண்டநேர சந்திப்பை அடுத்தே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர்,அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் முதற்கட்ட நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெரும் என்று கூறினார்.

அத்துடன், அரசியலமைப்பின் இரண்டாம்கட்ட சீர்த்திருத்தத்தின் போது, தேர்தல் முறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்த அவர், மூன்றாவதாகவே செனட் குழு அமைக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த சீர்த்திருத்தங்கள் அனைத்தும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் செய்து முடிக்கப்படும் என்றும் அமைச்சர் வீரவன்ச மேலும் கூறினார்.  

 

  Comments - 0

  • KONESWARANSARO Friday, 14 May 2010 12:15 AM

    தமிழர்களின் மனங்களை வெல்லாமல் எத்தனை தடவைகள் எப்படித் திருத்தினாலும் அரசியலமைப்பு பயனற்ற ஒன்றாகவே அமையும். அரசு எவ்வளவு பெரிய படைகளை வைத்திருந்தாலும் நிம்மதியாக ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .