2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

மாணவர் குழு மோதல்;மொரட்டுவை பல்கலைக்கழகம் மூடப்பட்டது

Super User   / 2010 மே 31 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, அந்தப் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நேற்றிரவு இடம்பெற்ற மேற்படி மோதலில் 3 மாணவர்கள் காயமடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

வெசாக் தினத்தை முன்னிட்டு குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் கண்காட்சியொன்றை  ஏற்பாடு செய்திருந்ததாகவும், இதன்போதே, மேற்படி மோதல் இடம்பெற்றதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டது.

பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக கூறிய பொலிஸ் ஊடகப் பிரிவு, எனினும், தற்போது அங்கு சுமூகமான நிலைமை காணப்படுவதாகவும் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--