2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

மரத்துடன் லொறி மோதியதில் சாரதி பலி

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொஷான் துஷார தென்னகோன்

பொலன்னறுவை- பெதிவெவ பகுதியில், இன்று (13) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில், நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து-கல்முனை நோக்கிப் பயணித்த லொறியொன்று,வேப்ப மரமொன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில், இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.

லொறியின் சாரதி, அதிக  வேகத்தில் வாகனத்தை செலுத்தியமையே விபத்துக்கான காரணமென, பொலன்னறுவை போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனைப் பகுதியைச் சேர்ந்த, 49 வயதுடைய முகமது இஸ்மாயில் என்பவரே, விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் லொறியில் பயணித்த மற்றுமொருவர், காயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .