2025 ஜூலை 12, சனிக்கிழமை

மாலைதீவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ

Super User   / 2010 ஜூலை 07 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றுகாலை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவை சென்றடைந்தார்.

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஒருநாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவு ஜனாதிபதி நஷீட்டுக்கும் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கும் இடையில் அதிகாரப் போட்டியொன்று ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இலங்கை ஜனாதிபதி அங்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாலைதீவு அரசியலமைப்பின்படி அமைச்சரவை உறுப்பினர்களை ஜனாதிபதி நேரடியாக தெரிவு செய்யமுடியும். ஆனால் ஒவ்வொரு நியமனமும் நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும். இந்நிலையில் நாடாளுமன்றம் தமது நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையிடுவதாகக் கூறி 13 பேர் கொண்ட அமைச்சரவை கூட்டாக இராஜினாமாச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  மாலைதீவு ஜனாதிபதி நஷீட் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த கலந்துரையாடல்களை நடத்துவார் என அறிவிக்கப்பட்டது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .