2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

மலையக மக்கள் முன்னணியின் புதிய தலைவராக இராதாகிருஷ்ணன்?

Super User   / 2010 ஜூன் 20 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர்  வி.எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி தொடர்பாக தமிழ்மிரர் இணையதளம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.இராதாகிருஷ்ணனுடன் சற்று முன் தொடர்பு கொண்டது.

தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை உறுதிப்படுத்திய வி.எஸ். இராதாகிருஷ்ணன், இது குறித்து தாம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான பி.சந்திரசேகரனின் மறைவை அடுத்து அவரின் மனைவி சாந்தி சந்திரசேகரன் தலைமை பதவியை பொறுப்பேற்றார்.

எனினும், மலையக மக்கள் முன்னணியின் தலைமை பொறுப்பை ஏற்குமாறு தற்போது சாந்தி சந்திரசேகரன் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தலைவர் பதவி கைமாற்றப்பட்டால் சாந்தினி சந்திரசேகரன் கட்சியின் பொது செயலாளராக செயற்படுவார் என்று தமிழ்மிரர் இணையதளத்திற்க்கு கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.(R.A)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .