2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

‘முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு’

Editorial   / 2020 மார்ச் 07 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தரும் கடல் அட்டை, சங்கு பிடிப்பவர்களால் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கரையோர மீனவ அமைப்புக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன.

மாத்தளம், பொக்கணை, இரணைப்பாலை, ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு, தேவிபுரம், சுதந்திரபுரம் கடற்தொழில் கிராமிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து நேற்று முன்தினம்(05),  முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர், கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளனர்.

அம்பலவன், பொக்கணை கிராமத்தில் வெளிமாவட்டத்திலிருந்து கடந்த காலங்களில் பிரதேச செயலாளரின் அனுமதியின்றி, வாடி அமைத்து கடல் அட்டை, சங்கு பிடித்தார்கள்.

இதனால் தமது மக்களின் வாழ்வாதாரத் தொழில்களான கரைவலை, சிறு கைத்தொழில்கள் பாதிப்படைந்துள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிராமத்தில் கலாசார சீர்கேடு, போதைப்பொருள் பாவனைகளும் சூழல் மாசடைதல், பாலியல் துஸ்பிரயோகங்களும் இதனால் நடைபெறுவதாகவும் அந்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, கிராம மக்களின் நலன் கருதி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், இனிவரும் காலங்களில் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் கடலட்டை, சங்கு பிடிப்பவர்களை தடைசெய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X