2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

மலேஷிய முகாமிலுள்ள இலங்கை அகதிகள் தொடர்ந்து உண்ணாவிரதம்

Super User   / 2010 மே 27 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேஷிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் சிலர் மயக்கமடைந்திருப்பதாகவும் தெரியவருகிறது.

மலேஷிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 67 பேர் தங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள  வேண்டும் அல்லது மூன்றாவதொரு நாட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த  3 நாள்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது இவ்வாறிருக்க, மேற்படி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பவர்களை சந்திப்பதற்கு  மலேஷியாவிலுள்ள தமிழர்களுக்கான அமைப்பு முயற்சித்தபோதிலும், அது பலனளிக்கவில்லை எனவும் அறியவருகிறது.

மலேஷிய கடற்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த 75 இலங்கைத் தமிழர்களை பினாங்கு கடற்படையினர் அழைத்துச் சென்றிருந்த நிலையில், இவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--