2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

மழையினால் 3,297 குடும்பங்கள் பாதிப்பு

Super User   / 2010 மே 14 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக கொழும்பு உட்பட பல பாகங்களிலிருந்தும் சுமார் 3,297 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

கொழும்பு, களுத்துறை மற்றும் நுவரெலியா போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அந்நிலையம் தெரிவித்தது.

கொழும்பு மாவட்டத்திலிருந்து 3,120 குடும்பங்களும் களுத்துறை மாவட்டத்தில் 175 குடும்பங்களும் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 13 குடும்பங்களுமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ஏற்பட்ட மினி சூறாவலி காரணமாக ராமையா உதயகுமார் (வயது 35) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். அத்துடன் அப்பகுதியைச் சேர்ந்த 13 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, கொழும்பில் புதுக்கடை, கிராண்ட்பாஸ், ஹுனுபிட்டிய, புளுமெண்டல், நவகம்புர உட்பட பல பகுதிகளைச் சேர்ந்த வீடுகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.    

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--