Editorial / 2020 ஜனவரி 03 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பா. நிரோஷ்
அரசமைப்புக்கு எதிரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகளே, தான் ஐ.தே.கவில் இணையக் காரணமென, புதிதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பெற்ற வருண லியனகே தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வருண லியனகே, நாடாளுமன்றத்தின் இன்று, எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துக்கொண்டார்.
மஹிந்த ராஜபக்ஷவின் அரசமைப்புக்கு எதிரானச் செயற்பாடுகளால், தான்அதிருப்தி அடைந்ததாகவும் இதனாலேயே, தான் ஐ.தே.கவில் இணைந்து கொண்டதாகவும், தனது முதலாவது நாடாளுமன்ற உரையில் அவர் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.கவின் சார்பிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் கூறிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை பிரதமராக்குவதற்காகத் தான் செயற்படுவதாகவும் கூறினார்.
8 minute ago
15 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
21 minute ago