2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

மஹிந்தவுக்கு விளங்கப்படுத்துவோம்: ஹக்கீம்

Administrator   / 2016 டிசெம்பர் 14 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

செயலாளர் நாயகமும் செயலாளரும் கட்சிக்குள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினை நாளை வியாழக்கிழமை சந்தித்து தெளிவுபடுத்தவுள்ளதாக இன்றைய பேராளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதென ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

“கட்சியின் செயலாளா் சம்பந்தமாக கட்சிக்கு அறிவிக்காமலே ஹசன்அலி, தோ்தல் ஆணைக்குழுவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளாா். இது சம்பந்தமான தெளிவினை, நாளைய தினத்தில் என்னைச் சந்தித்து ஹசன்அலி தெளிவுபடுத்தலாம். கட்சிப் பேராளா் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியே கட்சி யாப்பு திருத்தப்பட்டு இரண்டு செயலாளா் அரசியல் போட்டியிடாத உயா்பீட செயலாளா் நியமிக்கப்பட்டாா். இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு (மஹிந்த தேஷப்பிரிய) நாளைய தினம் விளங்கப்படுத்துவோம். ஜனவரி 2ஆம் திகதி மீண்டும் உயா்பீடம் கூடி, செயலாளர் தெடர்பில் என்ன தீர்மானம் எடுக்கப்படவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும். அதன் பின்னர்தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டினை நாங்கள் அறிவிப்போம்” என கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

இன்றைய பேராளர் மாநாட்டில் ஹசன்அலி சமுகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .