Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தவறான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். சீனர்களுக்கு நாட்டை விற்பதாக தெரிவித்து வருகிறார். நாங்களா முதலில் நாட்டை சீனாவுக்கு விற்றோம். இவ்வாறான கருத்து தெரிவிக்கும் மஹிந்த எப்படி ஆட்சி செய்தார் என்பது குறித்து வருத்தமாக உள்ளது' என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, தெரிவித்தார்.
நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடாகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போது, அவர் இவ்வாறு கூறினார்.
மஹிந்தவின் ஆட்சி காலத்திலேயே, கொழும்பு துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள் சீனாவுக்கு விற்கப்பட்டது. மஹிந்த சீனாவிடம் கடன்பெற்று ஹம்பாந்தோட்டையில் கொட்டினார். ஆனால், செலவழித்ததில் ஒரு பகுதிகூட வருமானமாக திரும்ப கிடைக்கவில்லை.
நாட்டின் வளத்தை விற்பனை செய்ததும், வீண்விரயம் செய்ததும் மஹிந்த ராஜபக்ஷதான். கொழும்பு நகரத்திட்டமிடல், துறைமுக நகரம் உள்ளிட்டவற்றில் நாட்டை படுகுழியில் தள்ளியவர் மஹிந்தவே.
அவர் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தி நாட்டை கட்டியெடுப்ப வேண்டியுள்ளது. சீனாவுக்கு நாங்கள் இடத்தை விற்கவில்லை. அரசு மற்றும் தனியார் இணைந்தே இந்த அபிவிருத்திகள் முன்;னெடுக்கப்படுகின்றன. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதால், இன்னும் அதிகமான கப்பல்கள் அங்கு வரும். அதனூடாக வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும். இதனால் கொழும்பு துறைதுமுகத்துக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை குறையாது.
நல்லாட்சியில் இரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட வேலைதிட்டங்கள் வெளியில் தெரிந்திருக்க வாய்பில்லை. தற்போது வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. இனிமேல் அதற்கான பலன் அனைவருக்கும் கிடைக்கும்.
யார் சீனாவுக்கு இடத்தை முதலில் விற்றது என்று நன்கு தெரிந்திருந்தும் இப்போது எம்மீது பழிசுமத்தி கருத்து வெளியிடும் ராஜபக்ஷ, எவ்வாறு நாட்டை நிர்வகித்தார் என்பது குறித்து கவலையாக உள்ளது. கடந்த தேர்தலின்போது 1200 கோடி ரூபாய் பணம், மத்திய வங்கியிலிருந்து வெளியே சென்றது. அது தொடர்பான விடயங்கள் மூடி மறைக்கப்பட்டன. தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
9 hours ago