2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

மாகம்புர ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர்

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கும் சேவைக்குத் திரும்புமாறும் அவ்வாறில்லாவிடின், சேவையை விட்டுச் சென்றவர்கள் என்று கருதப்படுவார்கள் என்றும், ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டிருந்தக காலக்கெடுவை அடுத்து, அவ்வூழியர்கள் இன்று, பணிக்குத் திரும்பியுள்ளனர்.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க விடுத்த அறிவிப்பை அடுத்தே, பணிக்குத் திரும்பும் தீர்மானத்தைத் தாம் எடுத்ததாக, ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், தங்களுடைய தொழிற்சங்கப் போராட்டம், தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் பணிக்குத் திரும்பி, கையெழுத்திட்டதன் பின்னர், தொடர்ந்தும் தங்களது போராட்டத்தைத் தொடர்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .