2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

9 மாதத்தில் 283 இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் விநியோகம்

Gavitha   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடத்தின் முதல் 9 மாத காலப்பகுதிக்குள், இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால், 423,066 புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக, புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், மத்திய கிழக்கு நாடுகளுக்கு 132,705 கடவுச்சீட்டுக்களும் மற்றையநாடுகளுக்கான கடவுச்சீட்டுக்கள் 269,647 விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 283 புதிய இராஜதந்திர கடவுச்சீட்டுக்களும் முதல் 9 மாத காலப்பகுதிக்குள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் 54,761 கடவுச்சீட்டுக்களில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேகாலப்பகுதிக்குள், 64,698 வெளிநாட்டவருக்கு, புதிய இலங்கை விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--