2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

முதல்வராகப் பதவியேற்றார் ஜெயலலிதா

Thipaan   / 2016 மே 23 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஆறாவது முறையாக, தமிழக முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜெயலலிதா, தமிழக ஆளுநர் ரோசையா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதுடன், அமைச்சரவையில் நியமிக்கப்பட்டிருக்கும் 28 அமைச்சர்களும் கூட்டாகப் பதவிப் பிரமாணமும் இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து கொண்டனர்.

சென்னைப் பல்கலைக்கழக நூற்ற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில், தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 16ஆம் திகதி இடம்பெற் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ஜெயலலிதா, 40.80 சதவீத வாக்குகளையும் 134 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .