2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

மின் கட்டணத்தில் புதிய நடைமுறை

Princiya Dixci   / 2017 மே 18 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய நடைமுறைக்கு அமைய, மின்சாரக் கட்டணத்தை அறவிடுவதற்கான கட்டணம் அதிகரிக்காதென்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனம் மின் பாவனையாளர்களுக்காகப் புதிய கட்டண முறையொன்றை தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதாக, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சார சபை சமர்ப்பித்துள்ள ஆலோசனைக்கு அமைய பொதுமக்கள் நுகர்வோர் ஆணைக்குழு, இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைவாக, மின்சார பாவனையாளர்கள், மின்சாரத்தைப் பயன்படுத்தும் கால நேரத்துக்கு இடையில் தேவையான வகையில் மின்சாரத்தை பயன்படுத்த முடியும்.

அதாவது, இரவு 10.30 முதல் காலை 5.30 வரை ஒரு அலகுக்காக அறவிடப்படும்தொகை 13 ரூபாயாகும். காலை 5.30 முதல் மாலை 6.30 வரை ஒரு அலகுக்காக அறவிடப்படும் தொகை 25 ரூபாயாகும். மாலை 6.30 முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்தப்படும் ஒரு மின் அலகுக்காக கட்டணம் 54 ரூபாயாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .