2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

யுத்த வெற்றியின் ஒரு வருட பூர்த்தி விழா; கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடு

Super User   / 2010 ஜூன் 16 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்த வெற்றியின் ஒரு வருட பூர்த்தி விழா, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலி முகத்திடலில் கொண்டாடப்படவுள்ள நிலையில் கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த போக்குவரத்து ஏற்பாடுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 5மணி முதல் விழா நிறைவடையும் வரையில் நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸார் கூறினர்.

இந்நிலையில், கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் தும்முள்ளை சுற்றுவட்டத்தினூடாக வந்து தேர்ஸ்டன் வீதி, கேம்பிரிஜ் பிளேஸினூடாகத் திரும்பி ஹோர்டன் பிளேஸ் சுற்றுவட்டம் மற்றும் சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர மாவத்தை, மருதானையூடாக கொழும்புக்குள் பிரவேசிக்க முடியும்.

இதேவேளை, கொழும்பு நகரிலிருந்து வெளிச்செல்லும் வாகனங்கள், சீனோர் சந்தி, டெக்னிகல் சந்தியினூடாக வலது புறம் திரும்பி மருதானை பாலத்தினூடாக காமினி சுற்றுவட்டம், டார்லி வீதி, இப்பன்வெல சந்தி, லிப்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, எஃப்.ஆர்.சேனாநாயக்க மாவத்தை, சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர மாவத்தையினூடாக இடது புறம் திரும்பி நந்தா மோடர்ஸ் சந்தி வரை பயணித்து வலது புறம் திரும்பி சினமன் கார்டன் சுற்றுவட்டம், ரீட்டாவத்தை, தும்முல்லைச் சந்தி, பம்பலப்பிட்டியூடாக புள்ளெர்ஸ் வீதிக்கு பயணிக்க முடியும்.

இதேவேளை, குறித்த வெற்றி விழா தினத்தன்று கொழும்பின் சில வீதிகள் அதிகாலை 5 மணி முதல் விழா நிறைவடையும் வரையில் மூடப்படும் என்றும் பொலிஸார் கூறினர். 

இந்நிலையில், கொழும்பு காலி முகத்திடலிலிருந்து பம்பலப்பிட்டி சந்தி (கொள்ளுப்பிட்டி சந்தி உட்பட) வரயான பிரதான வீதி, ஜஸ்டிஸ் அக்பார் மாவத்தை, டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தை, சீனோர் சந்தியிலிருந்து கொழும்பு - கோட்டை வரையான பிரதான வீதி மற்றும் கான் கடிகாரத் தூணிலிருந்து கொழும்பு - கோட்டை வரையான பிரதான வீதி ஆகியன மூடப்படும் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--