2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

யாழ்.தனங்கிழப்பு பகுதியில் குண்டு வெடிப்பு; இருவர் பலி; மூன்று பேர் படுகாயம்

Super User   / 2010 ஜூன் 08 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், தென்மராட்சி தேற்குப் பிரதேசத்திலுள்ள தனங்கிழப்புப் பகுதியில் இடம்பெற்ற வெடி விபத்தில் இரண்டு பேர் உயுரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த பகுதியிலுள்ள குப்பை மேடொன்றில் கிடந்த குண்டொன்று வெடித்துச் சிதறியதை அடுத்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மீளக்குடியமரும் பிரதேசத்தில் காணியைத் துப்பரவு செய்து குப்பைகளை கூட்டி எரிக்கும் போதே இந்த குண்டு வெடித்துள்ளது என்று பொலிஸார் கூறினர்.

சம்பவத்தில் 29 வயதுடைய பிரதாப் மற்றும் 38 வயதுடைய பொன்சேகர் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.  இதன்போது காயமடைந்தவர்கள் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--