2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

யாழ் நூல்நிலைய எரிப்பு;தமிழ் சமூகத்திடம் அமைச்சர் சம்பிக்க மன்னிப்பு கோரினார்

Super User   / 2010 ஜூன் 21 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் சார்ந்த சமூகத்தினால் யாழ் நூல்நிலையம் எரிக்கப்பட்டமைக்கு  மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளருமான  பாட்டலி சம்பிக்க ரணவக்க தமிழ் சமூகத்திடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

யாழ் நூலைநிலையத்திற்கு புத்தகங்கள் சிலவற்றைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு மன்னிப்புக் கோரினார்.

இந்நிகழ்வில்  ஜாதிக ஹெல உறுமயவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ஒமல்போ சோபித தேரர் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

  Comments - 0

 • Ossan Salam - Qatar Monday, 21 June 2010 08:54 PM

  காலம் கடந்தாவது ஞானம் பிறந்தாலும் இனத்தின் பெயரால் இத்தகைய தீ(ய)ச் செயல்கள் இனி மேலும் இந்நாட்டில் இடம்பெறக்கூடாது என்பதும் சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதும் தான் எமது பிரார்த்தனை ஆகும். அமைச்சரின் பெருந்தன்மையையும் பாராட்டுகின்றோம். நாம் வாழ வேண்டும் என நினைப்பதில் தவறில்லை. ஆனாலும் நாம் எல்லோரையும் ஆழ வேண்டும் என நினைப்பது தான் இங்கு தவறாகும். இது எல்லோருக்கும் பொருந்தும்.

  Reply : 0       0

  xlntgson Monday, 21 June 2010 10:08 PM

  ரொம்ப பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லாதீர்கள், சம்பிக்க சகோதரரே! நீங்கள் காணி பொலீஸ் அதிகாரங்களை பகிர எதிர்ப்பில்லாவிட்டால் போதும்! உலகத்தமிழ் இயக்கங்கள் எதிர்க்கின்றன. இது ஒருகையால் கொடுத்து மறுகையால் எடுப்பதற்கு வசதியாக இருக்கிறது என்று, நீங்கள் கொடுத்தால் எடுக்க இயலாது என்று பூச்சாண்டி காட்டுகின்றீர்கள். உண்மையில் இவற்றை பரீட்சித்துப்பார்க்க ஜனாதிபதி விரும்பினாலும் நீங்கள் தடையாக இருக்காதீர்கள்! உங்கள் நண்பர் விமல்வீரவன்சவுக்கும் கூறுங்கள். அவருக்கு தனியாகவும் நான் கேட்டுக்கொண்டு இருக்கின்றேன்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--