2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

யாழ். வாகன விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2010 ஜூலை 06 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் யாழ். தினக்குரல் பத்திரிகை நிறுவனத்தின் விநியோகப் பகுதி ஊழியர் ஒருவர் பலியாகியுள்ளார்.

தென்மராட்சி, உசன் பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த் மேற்படி நபர், சம்பவ இடத்திலேயே பலியானார். யாழ்ப்பாணம் திருநெல்வேலி காளி கோயிலடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையாரான பி. ஜெயச்சந்திரன் (வயது 33) என்பவரே பலியானவராவார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .