2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

ரஜினிகாந்துக்கு ரவி கருணாநாயக்க அழைப்பு

George   / 2017 ஜூன் 08 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இலங்கை வர நினைத்தால் தாராளமாக வரலாம். அவர் இலங்கையிலும் பிரபலமான நடிகர்தான். அவருக்கு அங்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அவர் வருவதில் ஒரு பிரச்சினையும் இல்லையென இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, டெல்லியில்  நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் லைகா நிறுவனம் சார்பில் புதிய வீடுகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, ரஜினி திட்டமிட்டிருந்தார். ஆனால், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஒருசிலரின் எதிர்ப்பு காரணமாக இலங்கை பயணத்தை இரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X