2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

‘ரஞ்சன் மட்டுமே குற்றவாளியல்ல’

Editorial   / 2020 ஜனவரி 10 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

பரப்பரப்பாக இன்று பேசப்படும் சகல விடயங்களுக்கும், ரஞ்சன் ராமநாயக்க மட்டுமே பொறுப்பல்ல. சகல குற்றச்சாட்டுகளையும் அவர் மீது மட்டுமே சுமத்துவது தவறானதாகுமெனத் தெரிவித்த அரசாங்கத்தின் பேச்சாளரான இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, முன்னாள் பிரதமர் முதல், கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் வரையிலும் அவருடன் தொடர்பில் இருந்துள்ளனர் என்றார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில (09) நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில், பிரதம நீதியரசர் கவனமெடுத்து, நீதிமன்றம் தொடர்பிலான நம்பிக்கை, மக்களிடமிருந்து சிதைந்து போவதற்கு முன்னர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட அவர், இந்த விவகாரம் தொடர்பில், பக்கச்சார்பற்ற விசாரணையை முன்னெடுத்து, மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் நீதிமன்றம் தொடர்பான பிழையான எண்ணப்பாட்டை நீக்க வேண்டும் என்று கூறினார்.

சட்டம், ஒழுங்குகள் கடந்த ஆட்சியில் மிகவும் சீர்குலைந்துக் காணப்பட்டமை, சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்த அவர், நல்லாட்சி என்றும் பெயருடனேயே, இவையெல்லாம் அரங்கேற்றப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

“சுயாதீன ஆணைக்குழுக்கள், சட்டத்தை செயற்படுத்தல், பொலிஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களில் அரசியல் தலையீட்டை தவிர்த்தல் என்பன முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தனர். எனினும், நீதிமன்றத்தின் சுயாதீனம், அம்பலமாகியுள்ளது” என்றார். 

நாடாளுமன்ற பிரதிநிதிகள், சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளமை, நீதித்துறையில் தலையீடு செய்துள்ள விதம் உள்ளிட்ட பல விடயங்கள் வெளியே கசிந்துள்ளன எனத் தெரிவித்த அவர், இதற்கெதிரான செயற்பாடுகளை, அரசியல் பழிவாங்கலாக அர்த்தப்படுத்த முயல்பவர்கள் தமது குற்றச்சாட்டு, தவறுகளை மறைப்பதற்கு எடுக்கும் நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம் என்றும் சுட்டிக்காட்டினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--