2021 ஜனவரி 27, புதன்கிழமை

ரணிலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவிகோரி சபாநாயகருக்கு கடிதம்

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர், முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றுமொரு தரப்பினரால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளதாக செய்தி வெளியான நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதிவிக்கான போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .