2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

ரணிலுக்கு விடுத்த அழைப்பு செல்லுபடி நிலையிலேயே உள்ளது

Editorial   / 2020 மார்ச் 09 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியுடன்  இணைந்துக்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்குச் சென்று விடுத்த அழைப்பு, இன்னும் செல்லுபடி நிலையிலேயே உள்ளதென, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கதவடைக்காது எனவும், எனவே சகலரும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக்​கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்காக அத்துல்கோட்டை பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 நாம் ​செயற்படுத்துவது ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் அனுமதியை ​பெற்றே, அவ்வாறு அனுமதியளிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை எதிர்காலத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்க எமக்கு வரம் கிடைத்துள்ளது. எனவே இதற்கு தடை விதிக்க எந்தவொரு நபராலும் முடியாதென்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X