2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

ரயில் தண்டம் நாளைமுதல் அதிகரிப்பு

Kanagaraj   / 2016 மே 31 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் தண்டம் நாளை முதலாம் திகதி முதல் 3,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.

பயணச்சீட்டுகள் மூலமாக ரயில்வே திணைக்களத்துக்கு கிடைக்காமல் போகின்ற வருமானத்தை திரட்டிக்கொள்வதற்கும். பயணச்சீட்டுக்களை எடுத்துக்கொண்டு நியாயமான முறையில் ரயிலில் பயணிக்கும் பயணிகள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளை நிவர்த்திசெய்யும் வகையிலேயே தண்டனைக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பயணச்சீட்டை எடுக்கும் வகுப்பை தவிர ஏனைய வகுப்புகளில் பயணிக்கக்கூடாது. பயணத்தை ஆரம்பிக்கும் ரயில் நிலையத்திலிருந்து போய் இறங்கும் ரயில்நிலையம் வரையிலும் இந்த நடைமுறை செல்லுப்படியாகும்.

பயணச்சீட்டை எடுக்காமல் பயணித்தால், அந்த பயணச்சீட்டுக்கான கட்டணம் இரண்டு மடங்காகவும், தண்டப்பணம் 3,000 ரூபாவும் அறவிடப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

பயணச்சீடின்றி பயணித்தல், குறித்த வகுப்பில் பயணிக்காமல் விடுதல், பயணஞ்செய்யும் தூரத்துக்கு அப்பால் பயணித்தல், பயணச்சீட்டை எடுக்கும் வகுப்புக்கு மேலான வகுப்பில் பயணித்தல், பயணிக்கும் ஒருசிலருக்கு மட்டும் பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு கூடுதலானோர் பயணித்தல் ஆகிய குற்றங்களுக்காக தடைவிதிக்கப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .