Editorial / 2017 ஜூன் 07 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா சென்றுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது, அமைச்சர் ரவிக்கு, பிரதமர் மோடி, தனது வாழ்த்தைத் தெரிவித்தார் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சுத் தெரிவிக்கிறது.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக, அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு, கடந்த மாதம், இலங்கைக்கு மேற்கொண்ட, பயன்தரக்கூடியதும் ஞாபகார்த்தமானதுமான விஜயத்தை, பிரதமர் மீள ஞாபகப்படுத்தினார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக, புதிய பொறுப்பை ஏற்றுள்ள கருணாநாயக்கவுக்கு, அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
"இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஆகியவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள், அழிவுகள் ஆகியனவற்றுக்கு, தனது அனுதாபங்களை, பிரதமர் வெளிப்படுத்தினார். இந்த விடயத்தில், இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவுவதற்கு, இந்தியாவின் தயார்நிலையை, அவர் உறுதிப்படுத்தினார்.
"வெள்ளம், மண்சரிவுகள் ஆகியவற்றின் பின்னர், இந்தியா உடனடியாக வழங்கிய உதவிகளுக்கு, பிரதமர் மோடிக்கு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, தனது நன்றியைத் தெரிவித்தார். அத்தோடு, இந்தியாவுடனான நெருக்கமான உறவை, தொடர்ந்து பலப்படுத்துவதற்கான, இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை, உறுதிப்படுத்தினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2 hours ago
26 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
26 Dec 2025