2021 ஜனவரி 16, சனிக்கிழமை

ரவிநாத் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராக மீண்டும் நியமனம்

Editorial   / 2019 நவம்பர் 20 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டலுவல்கள்  அமைச்சின் செயலாளரான ரவிநாத் ஆரியசிங்கவை, மீண்டும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராகவே நியமிக்க ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்‌ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

நேற்றிலிருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு சேவைத்துறையில் சிரேஸ்ட இராஜதந்திரியான இவர், பல நாடுகளின் தூதுவராகக் கடமையாற்றியுள்ளதுடன், கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .