Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
George / 2016 ஜூலை 28 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
'ஊடகவியலாளர்கள் ஏன் பயப்படவேண்டும்? எதற்குப் பயம்? இப்போது ராஜபக்ஷக்கள் இல்லைத்தானே அதனால் பயப்படத் தேவையில்லை' என்று, சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், 'பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அமைச்சராக இருந்த காலத்தில் தான், ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டனர்.
ஊடகவியலாளர் எக்னெலிகொட காணாமற்போன போது, அதுபற்றி அவர் வாய்திறக்கவேயில்லை. ஆனால், இன்றுதான் ஊடக சுதந்திரம் இல்லையென்று அவர் கூறுகின்றார். அவரது பேச்சை இப்போது எந்தவோர் இராஜதந்திரிகளும் கணக்கெடுப்பதில்லை' என்றும் கூறினார்.
பத்திரிகை ஆசிரியர்களுக்கு, பிரதமர் அச்சுறுத்தல் விடுக்கவில்லை. பொய்யான செய்திகளை வெளியிடுவதாக சில பத்திரிகைகள் மீது குற்றம் சுமத்தியிருந்தார். அப்படி, பிரதமர் கூறியதில் தவறு இருந்திருந்தால், தாங்கள் அவ்வாறு செய்தி வெளியிடாமல் இருந்திருந்தால், அடுத்தநாள் பத்திரிகையில் „தாங்கள் அவ்வாறு செய்பவர்கள் இல்லை என்று கட்டமிடப்பட்ட செய்தியொன்றை வெளியிட்டிருக்கலாம். ஆனால், எந்தவொரு பத்திரிகை ஆசிரியரும் அவ்வாறு செய்யவில்லை' என்றார்.
குறுக்கிட்ட ஊடகவியலாளர், 'அரசாங்கத்தின் மீதுள்ள அச்சத்தால், அவ்வாறு செய்யாமல் ஆசிரியர்கள் மௌனம் காக்கலாம் தானே?' எனக்கேட்டனர். அதற்கு பதிலளித்த ராஜித, 'எதற்கு பயம்? இப்போது ராஜபக்ஷக்கள் இல்லையே... அதனால் பயப்படத் தேவையில்லை' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago
4 hours ago