2025 டிசெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ராஜபக்ஷ குடும்பத்தையே உள்ளே தள்ள வேண்டும்: பொன்சேகா

Menaka Mookandi   / 2016 ஜூலை 15 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முழு ராஜபக்ஷ குடும்பத்தினரும், பாரிய நிதி மோசடிகளில் மாத்திரமன்றி, கொலைச் சம்பவங்களுடனும் தொடர்புபட்டுள்ளனர் என்பது உண்மையாயின், அவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டியது கட்டாயமாகும் என முன்னாள் இராணுவ தளபதியும் பிரதேச அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார்.

'என்னைப் பொருத்தமட்டில், ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைவரும் 'உள்ளே' இருக்கவேண்டியவர்களாவர்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுள்ளனர். அவர்களை, வெறுமனே சிறைக்கு அனுப்புவதால் பிரயோசனம் இல்லை' என்றும் சரத் பொன்சேகா கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X